Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் 13 பவுன் தங்க கட்டி மாயம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் 13 பவுன் தங்க கட்டி மாயம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் 13 பவுன் தங்க கட்டி மாயம்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் 13 பவுன் தங்க கட்டி மாயம்

ADDED : மே 11, 2025 02:41 AM


Google News
திருவனந்தபுரம்:திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் 13 பவுன் தங்க கட்டி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் மூலஸ்தானத்தில் அனந்த சயன விக்ரகத்தின் முன்னால் தலை, உடல், பாதம், என மூன்று பாகங்களை தரிசிப்பதற்காக மூன்று வாசல்கள் உள்ளன . இதில் தலைப்பகுதியில் உள்ள முதல் வாசலில் பழைய தங்க தகடுகளை மாற்றி புதிய தங்க தகடுகள் பதிக்கும் பணி நடக்கிறது.

கோயிலின் முன்புறம் உள்ள ஒற்றை கல் மண்டபத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தினமும் பாதுகாப்பு அறையில் இருந்து தங்கம் எடுக்கப்பட்டு பணி முடிந்த பின்னர் மீண்டும் பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். கடந்த ஏழாம் தேதி பணிகள் முடிந்து தங்கம் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இரண்டு நாள் இடைவெளியில் நேற்று காலை தங்கத்தை எடுத்த போது 13 பவுன் எடையுள்ள தங்க கட்டி மாயமாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். கோயில் சுற்றுப்புறங்களில் தேடியும் தங்கக் கட்டி கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் திருவனந்தபுரம் கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us