மரவள்ளி கிழங்கின் தோலை சாப்பிட்ட 13 பசுக்கள் பலி மாணவருக்கு குவியும் உதவிகள்
மரவள்ளி கிழங்கின் தோலை சாப்பிட்ட 13 பசுக்கள் பலி மாணவருக்கு குவியும் உதவிகள்
மரவள்ளி கிழங்கின் தோலை சாப்பிட்ட 13 பசுக்கள் பலி மாணவருக்கு குவியும் உதவிகள்

கேரள அரசு விருது
10ம் வகுப்பு படிப்பையும் கைவிடாமல் 20 க்கும் மேற்பட்ட பசுக்களை பராமரித்து வருவாய் ஈட்டியதால் 2021ல் சிறுவர்களுக்கான சிறந்த பால் உற்பத்தியாளர் விருதை வழங்கி மாணவர் மாத்யூவை கேரள மாநில அரசு கவுரவித்தது.
13 பசுக்கள் இறப்பு
இந்நிலையில் டிச.,31 இரவு வழக்கம் போல் மரவள்ளி கிழங்கின் தோலை பசுக்களுக்கு தீவனமாக வைத்து விட்டு மாத்யூ மற்றும் குடும்பத்தினர் துாங்கச் சென்றனர். சிறிது நேரத்தில் பசுக்களுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி 13 பசுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. மரவள்ளி கிழங்கின் தோலில் ஏற்பட்ட விஷ தன்மையால் பசுக்கள் இறந்ததாக தெரிய வந்தது. மாத்யூவும், குடும்பத்தினரும் பெரும் சோகமடைந்தனர். வருவாய் இழப்பும் ஏற்பட்டது.
குவிந்த உதவிகள்
மாத்யூ குடும்ப நிலைமை தெரிந்து உதவிக்கரம் நீட்ட பலர் முன் வந்தனர். மாநில நீர் வளத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், பால்வளத்துறை அமைச்சர் சிந்து ராணி ஆகியோர் மாத்யூ வீட்டிற்கு சென்று அரசு சார்பில் 5 பசுக்கள் வழங்கப்படும் என்றனர். நடிகர் ஜெயராம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நேரில் வழங்கினார். நடிகர் மம்முட்டி ரூ.ஒரு லட்சமும், பிரதிவிராஜ் ரூ.2 லட்சமும் வழங்கினர்.