Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/10ல் அமித் ஷா கர்நாடகா வருகை காங்., சிவசங்கரப்பாவுடன் சந்திப்பு

10ல் அமித் ஷா கர்நாடகா வருகை காங்., சிவசங்கரப்பாவுடன் சந்திப்பு

10ல் அமித் ஷா கர்நாடகா வருகை காங்., சிவசங்கரப்பாவுடன் சந்திப்பு

10ல் அமித் ஷா கர்நாடகா வருகை காங்., சிவசங்கரப்பாவுடன் சந்திப்பு

ADDED : பிப் 05, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு ;கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த பின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதன்முறையாக மாநிலத்துக்கு வருகை தருகிறார்.

மைசூரின், சுத்துார் மடத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், காங்., மூத்த தலைவர் சிவசங்கரப்பா - பார்வதம்மா தம்பதியை கவுரவிக்கிறார்.

லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ., மேலிடம், கர்நாடகா மீது அதிக ஆர்வம் காண்பிக்கிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட, மற்ற தென் மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு அதிகமான செல்வாக்கு உள்ளது.

2019 லோக்சபா தேர்தலில், 25 தொகுதிகளை வாரி வழங்கிய மாநிலம். இம்முறை குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற, பா.ஜ., மேலிடம் உறுதி பூண்டுள்ளது. சட்டசபை தேர்தல் முடிந்த பின், இப்போதே முதன்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிப்ரவரி 10ல் கர்நாடகாவில், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மைசூரின் சுத்துார் மடத்தின் திருவிழா உட்பட, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.

10ம் தேதி காலை பெங்களூருக்கு வந்திறங்கும் அமித் ஷா, அன்று முழுதும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே லோக்சபா தொகுதி வாரியாக ஆய்வு செய்து பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில், வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்கிறார்.

ராஜ்யபா தேர்தலில், முன்னாள் அமைச்சர் சோமண்ணா சீட் எதிர்பார்க்கிறார். வயது மற்றும் ஆரோக்கியமின்மை காரணமாக, சாம்ராஜ்நகர் எம்.பி., சீனிவாச பிரசாத் உட்பட, சிலர் போட்டியிட மறுத்துள்ளனர். இத்தகைய தொகுதிகளுக்கு மாற்று வேட்பாளர்களை தேர்வு குறித்தும், கூட்டத்தில் ஆலோசனை நடக்கும்.

மறுநாள் மைசூரின், சுத்துார் மடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்பார்.

மடம் வளாகத்தில் காங்., மூத்த தலைவர் சிவசங்கரப்பா அளித்த நிதியுதவியில், புதிதாக கட்டப்பட்ட விருந்தினர் இல்லத்தை, அமித் ஷா திறந்து வைப்பார். இதே நிகழ்ச்சியில் சிவசங்கரப்பா, பார்வதம்மா தம்பதியை கவுரவிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us