10 ஆண்டுகளில் மெட்ரோவில் 100 கோடி மக்கள் பயணம்
10 ஆண்டுகளில் மெட்ரோவில் 100 கோடி மக்கள் பயணம்
10 ஆண்டுகளில் மெட்ரோவில் 100 கோடி மக்கள் பயணம்
ADDED : ஜன 31, 2024 05:25 AM
பெங்களூரு : பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள, மெட்ரோ ரயிலில் இதுவரை 100 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக, பி.எம்.ஆர்.சி.எல்., அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், 2011 அக்டோபர் 20ல், மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் துவங்கியது.
அன்று முதல் இன்று வரை, 100 கோடி மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். இதன் மூலம் நம்ம மெட்ரோ புதிய மைல் கல்லை எட்டியது.
போக்குவரத்து சேவையில் மெட்ரோ குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்துள்ளது. பெங்களூரில் மக்களின் அங்கமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, மக்களின் போக்குவரத்து தேவைகளை வழங்குவதில், மெட்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது.
போக்குவரத்து நெருக்கடியை குறைக்க உதவுகிறது. பயணியர் பாதுகாப்பாகவும், செல்ல வேண்டிய இடத்தை விரைந்து சென்றடையவும் செய்கிறது. சுற்றுச்சூழலுக்கு தகுந்தது.
தற்போது ஊதா மற்றும் பச்சை நிறப் பாதைகளில், மெட்ரோ ரயில் இயங்குகிறது. இன்னும் சில மாதங்களில் மஞ்சள் பாதையில் வர்த்தக போக்குவரத்து துவங்கும்.
இது தவிர நீல நிற பாதை, பிங் நிற பாதைகளில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடக்கின்றன. புதிய மெட்ரோ பாதைகள் அமைப்பதுடன், தற்போதைய பாதைகள் விஸ்தரிக்கவும், நம்ம மெட்ரோ திட்டம் வகுத்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.