தங்கவயலில் குடியரசு தின விருதுக்கு 10 பேர் தேர்வு
தங்கவயலில் குடியரசு தின விருதுக்கு 10 பேர் தேர்வு
தங்கவயலில் குடியரசு தின விருதுக்கு 10 பேர் தேர்வு
ADDED : ஜன 12, 2024 11:23 PM
தங்கவயல்: தங்கவயல் தாலுகா நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா 26ல் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து, தங்கவயல் மினி விதான சவுதாவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில், தாசில்தார் நாகவேணி முன்னிலையில், அனைத்து துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றல், போலீசார், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, சாரணர், சாரணியர் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
பல்வேறு கல்வி நிறுவனங்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது.
விழாவில் தங்கவயலில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 10 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
விழாவில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.