சிறுமியர் கருவுறுதல் அதிகரிப்பு தங்கவயலில் 10 பேர் பாதிப்பு
சிறுமியர் கருவுறுதல் அதிகரிப்பு தங்கவயலில் 10 பேர் பாதிப்பு
சிறுமியர் கருவுறுதல் அதிகரிப்பு தங்கவயலில் 10 பேர் பாதிப்பு
ADDED : பிப் 25, 2024 02:36 AM
தங்கவயல்: கோலார் மாவட்டத்தில் சிறுமியர் கருத்தரிப்பது அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு ஜனவரியில் மட்டுமே, 10 சிறுமியர் கருவுற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
கோலார் மாவட்டத்தில் சிறுமியர், சிறு வயதிலேயே கருத்தரிப்பது, மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. 2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் 8 மாதங்களில் 98 சிறுமியர் கர்ப்பமாக உள்ளதாக சுகாதார நலத்துறை தெரிவிக்கிறது. 2024 ஜனவரியில் தங்கவயல் தாலுகாவில் மட்டுமே, 10 சிறுமியர் கருவுற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த 10 பேரில் இருவர் மட்டுமே, 18 வயது நிரம்பியவர்கள். ஒரு சிறுமி டில்லியிலும், மற்றவர்கள் கோலார் மாவட்டம் தங்கவயல் கிராம பகுதியிலும் உள்ளனர்.
மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:
குறிப்பிட்ட வயதுக்கு முன்னதாகவே, கர்ப்பம் தரிப்பது உடல் நிலையை பாதிக்கும் என்பதை பெற்றோர் கவனிக்க தவறுகின்றனர். குழந்தை பிறந்த பின், தாயையும் ரத்த சோகை நோய் தாக்கும். தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான போதிய சத்து கிடைப்பதில்லை.
பிறந்த குழந்தை எடையளவு மிக குறைவாகவும், ஊனமான குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு பெண் 18 வயதுக்கு பின்னர் தான் கர்ப்பமாக வேண்டும்.
இது பெண்கள் உடல் நலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
சிறுமியர் திருமணத்திற்கு தடை விதிக்க, நகரம் முதல் கிராமம் வரை விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.
சிறுமியர் திருமணத்தை தடுப்பதில் போலீசார், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு, தாய் மற்றும் சேய் நலத்துறை மற்றும் பொது நல அமைப்புகள் ஆகியவை அதிக கவனம் செலுத்துகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.