ஒரு போஸ்ட் கார்டில் 5,000 முறை 'ஐ லவ் யூ இந்தியா' எழுதி சாதனை
ஒரு போஸ்ட் கார்டில் 5,000 முறை 'ஐ லவ் யூ இந்தியா' எழுதி சாதனை
ஒரு போஸ்ட் கார்டில் 5,000 முறை 'ஐ லவ் யூ இந்தியா' எழுதி சாதனை
ADDED : ஜூலை 21, 2024 07:13 AM

போஸ்ட் கார்டில் வழக்கமாக மற்றவர்களுக்கு தகவல் அனுப்ப பயன்படுத்துவோம். ஆனால், மைசூரைச் சேர்ந்த ஒருவர், ஒரே போஸ்ட் கார்டில் 65,000 எழுத்துகளை எழுதி சாதனை படைத்துள்ளார்.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தகடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜு, 48. டி.வி.எஸ்., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அப்போது நாளிதழ் ஒன்றில், தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன், போஸ்ட் கார்டில் 10,000 எழுத்துகள் எழுதி சாதனை படைத்ததாக செய்தி வெளியாகியிருந்தது.
இதை பார்த்த அவர், தானும் இதுபோன்று சாதனை செய்ய விரும்பினார். முதலில் I LOVE YOU INDIA என வார்த்தையை 5,000 முறை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி சாதனை படைத்துள்ளார். இது 65,000 எழுத்துக்களாகும்.
இதை 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'க்கு அனுப்பி வைத்தார். அவர்களும், அவரின் முயற்சியை ஆய்வு செய்து அங்கீகரித்து, 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சான்றிதழ் வழங்கினர்.
இதுமட்டுமின்றி, 1.10 வினாடிகளில் ஆங்கிலத்தின் 'ஏ' முதல் 'இசட்' வரை வாசித்து 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சான்றிதழ் வாங்கி உள்ளார்.
� போஸ்ட் கார்டில் 5,000 முறை, 'ஐ லவ் யூ இந்தியா' என, எழுதி சாதனை படைத்ததற்காக 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' சான்றிதழுடன் நாகராஜு. �போஸ்ட் கார்டில் நாகராஜு எழுதிய வார்த்தைகள்
.- நமது நிருபர் -