மோடி 'ஹாட்ரிக்' வெற்றி உலக தலைவர்கள் வாழ்த்து
மோடி 'ஹாட்ரிக்' வெற்றி உலக தலைவர்கள் வாழ்த்து
மோடி 'ஹாட்ரிக்' வெற்றி உலக தலைவர்கள் வாழ்த்து
ADDED : ஜூன் 05, 2024 11:25 PM
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துஉள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, 293 இடங்களை கைப்பற்றியது.
இதையடுத்து, இலங்கை, ஈரான், செஷல்ஸ் நாட்டு அதிபர்கள், நேபாளம், வங்கதேசம், பூடான், மியான்மர், மொரீஷியஸ் பிரதமர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாராட்டு
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'ஜனநாயக திருநாட்டில் பெரும் தேர்தல் பணிகளை சிறப் பாக நடத்தி முடித்துள்ள இந்தியாவிற்கு பாராட்டுகள்! அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு நெருக்கமான கூட்டாண்மை தொடரும். பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்' என, குறிப்பிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடின், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் நேற்றிரவு வாழ்த்து கூறினர்.
'தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அணிக்கு வாழ்த்துகள். இரு தரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த நலன்களையும் மனதில் வைத்து, இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்' என, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறியுள்ளார்.
'இந்தியாவும் உக்ரைனும் பொதுவான மதிப்புகள் மற்றும் வளமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. நம் கூட்டாண்மை தொடர்ந்து செழித்து, முன்னேற்றத்தையும் பரஸ்பர புரிதலையும் கொண்டு வரட்டும்' என, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவுகள் அதிபர் முஹமது முய்சு, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், பூடான் பிரதமர் ஷெ ரிங் டோப்கே.
மோடி நன்றி
நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால், பார்படாஸ் நாட்டு பிரதமர் மியா அமோர் மோட்லி, ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உட்பட 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துஉள்ளனர்.
இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா நாட்டு பிரதமர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.