ஹட்டி தங்க சுரங்கத்தில் மண் சரிந்து தொழிலாளி பலி
ஹட்டி தங்க சுரங்கத்தில் மண் சரிந்து தொழிலாளி பலி
ஹட்டி தங்க சுரங்கத்தில் மண் சரிந்து தொழிலாளி பலி
ADDED : ஜூலை 13, 2024 07:14 AM

ராய்ச்சூர், : ஹட்டி தங்க சுரங்கத்தில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தார்.
ராய்ச்சூர் மாவட்டம், ஹட்டியில் தங்க சுரங்கம் உள்ளது. இங்கு பாறைகளில் படிந்து இருக்கும் தங்கத் துகள்களை எடுப்பதற்கு வெடி பயன்படுத்தப்படுகிறது.
முன்னதாக வெடிவைப்பதற்கு பாறைகளில் ஓட்டை போடப்படும். நேற்று அதிகாலை பாறையில் ஓட்டை போடும் பணியில் ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிந்து, ஐந்து பேரும் சிக்கிக் கொண்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்த ஐந்து பேரையும் மீட்க முயன்றனர்.
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், ஐந்து பேரும் மீட்கப்பட்டனர். ஆனால் மவுனேஷ் என்ற தொழிலாளி இறந்தார். மற்ற நான்கு பேருக்கும், தங்க சுரங்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.