அங்கன்வாடியில் குக்கர் வெடித்து 14 சிறார்கள் காயம்
அங்கன்வாடியில் குக்கர் வெடித்து 14 சிறார்கள் காயம்
அங்கன்வாடியில் குக்கர் வெடித்து 14 சிறார்கள் காயம்
ADDED : ஜூலை 13, 2024 07:14 AM
துமகூரு, : அங்கன்வாடியில் குக்கர் வெடித்ததில், 14 சிறார்கள் காயம் அடைந்தனர்.
துமகூரு குப்பியின் சி.யடவனஹள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. நேற்று மதியம் சமையல் ஊழியர், சிறார்களுக்காக ஊட்டச்சத்து உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென குக்கர் வெடித்ததில், எட்டு சிறார்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையறிந்த பெற்றோர், அங்கன்வாடிக்கு ஓடி வந்தனர். குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அங்கன்வாடிக்கு பிள்ளைகளை அனுப்ப, பெற்றோர் தயங்குகின்றனர். அங்கன்வாடி கட்டடம் மிகவும் பழையது. இதை இடித்துவிட்டு, புதிதாக கட்டும்படி அரசை வலியுறுத்தினர்.
சம்பவம் நடந்த அங்கன்வாடியை, போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். பிள்ளைகளுக்கு மாற்று வசதி செய்து கொடுப்பதாக கூறினர்.
மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், “அங்கன்வாடி கட்டடம் பழையது; குறுகலானது. புதிய கட்டடம் கட்ட, மனை வழங்கும்படி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். ஆனால் இதுவரை மனை வழங்காததால், அங்கன்வாடி புதிய கட்டடம் கட்ட முடியவில்லை. மனை கிடைத்தவுடன், கட்டடம் கட்டுவோம்,” என்றார்.