Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மூணாறில் மண் சரிவில் சிக்கி பெண் பலி

மூணாறில் மண் சரிவில் சிக்கி பெண் பலி

மூணாறில் மண் சரிவில் சிக்கி பெண் பலி

மூணாறில் மண் சரிவில் சிக்கி பெண் பலி

ADDED : ஜூன் 26, 2024 08:05 AM


Google News
Latest Tamil News
மூணாறு : மூணாறில் பலத்த மழையால் மகாத்மாகாந்தி காலனியில் வீட்டின் மீது மண் சரிந்து இடிபாடுகளில் சிக்கி பெண் பலியானார்.

கேரள மாநிலம் மூணாறில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 6.6 செ.மீ., மழை பெய்தது.

நேற்று பகலிலும் பலத்த மழை தொடர்ந்தது. மாலை 5:30 மணிக்கு மகாத்மாகாந்தி காலனியில் 30 அடி உயரத்தில் இருந்து மண் சரிந்து தேவிகுளம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் குமார் என்பவரது வீட்டின் மீது விழுந்து வீடு சேதமடைந்தது. அப்போது வீட்டில் சமையலறையில் இருந்த குமாரின் மனைவி மாலா 39, இடிபாடுகளில் சிக்கினார். மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி, இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரண்மனா ஆகியோர் தலைமையில் போலீசார், தீயணைப்பு, வருவாய் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மண்ணிற்குள் குற்றுயிராய் கிடந்த மாலாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில் உயிரிழந்தார்.

மாலாவின் கணவர் குமார் பணிக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அப்பகுதியில் மீண்டும் மண்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் சுற்றிலும் வசித்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மழை தொடர்வதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us