மாடர்ன் இந்திரா யார்? வினய் குருஜி 'ஐஸ்'
மாடர்ன் இந்திரா யார்? வினய் குருஜி 'ஐஸ்'
மாடர்ன் இந்திரா யார்? வினய் குருஜி 'ஐஸ்'
ADDED : ஜூன் 29, 2024 11:11 PM
உடுப்பி: ''கர்நாடக அரசியலில், நான் பார்த்த திடமான பெண், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். இவர் மாடர்ன் இந்திரா'' என, கவுரிகத்தே ஆசிரமத்தின் அவதுாத வினய் குருஜி, 'ஐஸ்' வைத்தார்.
உடுப்பி பைந்துாரின் ஹேரம்ஜாலுவில் புதிதாக கட்டப்பட்ட 'ஷெப்டாக் நியூட்ரிபுட்ஸ்' பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை, கவுரிகத்தே ஆசிரமத்தின் அவதுாத வினய் குருஜியும், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரும் நேற்று திறந்து வைத்தனர்.
அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பேசியதாவது:
மனிதன் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தால் மட்டுமே, அவருக்கு கஷ்டப்படும் மக்கள் மீது மதிப்பிருக்கும். கிராமப்பகுதிகளில் அதிகமான தொழில்கள் உருவாக வேண்டும். தொழிலதிபர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொழிற்சாலை திறக்கப்பட்டது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிற்சாலை கட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதற்கு முட்டுக்கட்டை போடுவோர் அதிகம்.
இவ்வாறு அவர் பேசினார்.
வினய் குருஜி பேசியதாவது:
கர்நாடக அரசியலில், நான் பார்த்த திடமான பெண், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். இவர் 'மாடர்ன் இந்திரா'. பத்து ஆண் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சக்தி, இவருக்கு உள்ளது.
அமைச்சரின் அக்கறையால், கர்நாடக அரசின் மிக முக்கியமான 'கிரஹ லட்சுமி' திட்டம், இன்று வீடு, வீடாக சென்றடைந்தது. எந்த விதமான அரசியல் பின்னணியும் இல்லாமல், இன்று அரசியலில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இவரது செயல் திறன், மற்றவருக்கு முன் மாதிரியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.