கொள்ளைக்காரர்கள் யார்: சபையில் பாய்ச்சல்!
கொள்ளைக்காரர்கள் யார்: சபையில் பாய்ச்சல்!
கொள்ளைக்காரர்கள் யார்: சபையில் பாய்ச்சல்!
ADDED : ஜூலை 18, 2024 11:03 PM

பெங்களூரு:
சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி துணைத் தலைவர் அரவிந்த் பெல்லத்: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. தலித்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையா: பா.ஜ.,வினருக்கு சமூக நீதி என்னவென்றே தெரியாது.
பா.ஜ., - அஸ்வத் நாராயணா: நீங்கள் தான் ஊழல் செய்துள்ளீர்கள். கொள்ளை, கொள்ளை கொள்ளை... 'பே - சிஎம்', 'பே - சிஎம்' என்று ஊழல் செய்தது நீங்கள் தான்.
முதல்வர்: நான், 42 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஊழல் செய்தது யார் என்று நன்றாக தெரியும். நீங்கள் செய்த ஊழலை பகிரங்கப்படுத்துவேன். அதிகமாக கூச்சல் போட வேண்டாம். உங்களை விட அதிகமாக கூச்சல் போடுவதற்கு எங்களுக்கும் தெரியும். ஊழல் செய்து விட்டு வந்து இங்கே பேசுகிறீர்கள்.
(இந்த வேளையில், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. யார் என்ன பேசுகின்றனர் என்று சரியாக புரியவில்லை)
அமைச்சர் பைரதி சுரேஷ்: நீ ஒரு ஊழல்வாதி. கொள்ளைக்காரன். உங்கள் ஊழலை பகிரங்கப்படுத்துவேன்.
(இதனால், வாக்குவாதம் முற்றியது. கூச்சல், குழப்பம் நிலவியது. இருவரும் மாறி, மாறி ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ்சாட்டி கொண்டனர்)
அமைச்சர் தினேஷ் குண்டுராவ்: இவர், எந்த டாக்டர் என்று தெரியவில்லை. ஏதேதோ பேசுகிறார்.
அஸ்வத் நாராயணா: உங்களுடையதை பார்த்து கொள்ளுங்கள். மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதை கவனியுங்கள்.
பா.ஜ., - சுனில் குமார்: உங்களுடைய துணை முதல்வர், சிறைக்கு சென்று வந்துள்ளார். எங்களை பற்றி நீங்கள் பேசுகிறீர்களா. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு செய்தது யார்.
(இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது?
சபாநாயகர்: இப்படி எல்லாம் பேசக்கூடாது. அனைவரும் அமைதியாக இருங்கள்.
இவ்வாறு விவாதம் நடந்தது.