'பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை'
'பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை'
'பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை'
ADDED : ஜூன் 02, 2024 09:36 PM
பெங்களூரு: 'கர்நாடக மக்களிடம் ஏற்பட்ட சந்தேகத்தை போக்கும் நோக்கில், மாநில பொருளாதார சூழ்நிலை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் தெரிவித்தார்.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகாவை கொள்ளையடித்து, காங்கிரஸ் மேலிடத்துக்கு பணம் பரிமாற்றம் செய்ய, மாநில அரசுக்கு கார்ப்பரேஷன், வாரியங்களே ஏ.டி.எம்.,களாக உள்ளன.
தலித்துகள், பின் தங்கியோர், ஏழைகள், விவசாயிகள், கிராமப்பகுதிகளின் நலனுக்கு நிதி வழங்க வேண்டிய, கார்ப்பரேஷன், வாரியங்களின் நிதி, ஊழல்வாதிகளிடம் சேர்கிறது.
மாநிலத்தின் சூழ்நிலை தொடர்பாக, மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை போக்கும் வகையில், மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்துள்ள பிரமாண்ட ஊழலை கவனித்தால், மாநிலத்தில் உள்ள அனைத்து கார்ப்பரேஷன், வாரியங்களிலும் ஊழல் நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இவற்றின் பொருளாதார நிலை குறித்து, ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.