டீ, காபி விலையை உயர்த்த மாட்டோம் ஹோட்டல்கள் சங்க தலைவர் அறிவிப்பு
டீ, காபி விலையை உயர்த்த மாட்டோம் ஹோட்டல்கள் சங்க தலைவர் அறிவிப்பு
டீ, காபி விலையை உயர்த்த மாட்டோம் ஹோட்டல்கள் சங்க தலைவர் அறிவிப்பு
ADDED : ஜூன் 28, 2024 11:02 PM
பெங்களூரு: ''பால் விலை உயர்த்தப்பட்டாலும், டீ, காபி விலையை நாங்கள் உயர்த்த மாட்டோம்,'' என, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்கத் தலைவர் பி.சி.ராவ் கூறியுள்ளார்.
கர்நாடக அரசு பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. அத்துடன் பாலின் அளவையும் அதிகரித்து உள்ளது.
இதற்கு முன்பு 500 மி.லி., விற்கப்பட்ட பால், தற்போது 550 மி.லி., ஆகவும், 1,000 மி.லி., விற்கப்பட்ட பால், இப்போது 1,050 மி.லி., ஆகவும் மாற்றப்பட்டு உள்ளது.
பாலின் அளவை அதிகரித்து, விலை உயர்த்தப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசின் சொந்த விருப்பத்தை, தங்கள் மீது திணிப்பதாக பொதுமக்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.
பால் விலை உயர்வால், ஹோட்டல்கள், உணவகங்களிலும் டீ, காபி விலை உயர்த்த படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் சங்க தலைவர் பி.சி., ராவ் கூறியதாவது:
கே.எம்.எப்., பால் பாக்கெட்டில் கூடுதலாக 50 மி.லி., பாலை சேர்த்து, 2 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்கிறது. இனிமேல் பாலை குறைவாக வாங்குவோம்.
முன்பு ஒரு ஹோட்டலில் 100 லிட்டர் பால் வாங்கினால், இனிமேல் 95 லிட்டர் மட்டுமே வாங்குவோம். டீ, காபி விலையை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு சிரமம் கொடுக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.