ஓய்வு பெற்ற நாளன்றே ஆர்.டி.ஓ., அதிகாரி கைது
ஓய்வு பெற்ற நாளன்றே ஆர்.டி.ஓ., அதிகாரி கைது
ஓய்வு பெற்ற நாளன்றே ஆர்.டி.ஓ., அதிகாரி கைது
ADDED : ஜூன் 28, 2024 11:03 PM
ராம்நகர்: தவறு செய்தவர்களை காலம் எப்போதும் விடாது என்பதை, ராம்நகரில் நடந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. ஓய்வு பெற்ற நாளன்றே, ஆர்.டி.ஓ., அதிகாரி ஒருவர், லோக் ஆயுக்தாவால் கைது செய்யப்பட்டார்.
ராம்நகரின் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் பறந்தன.
எனவே லோக் ஆயுக்தா அதிகாரிகள், நேற்று மதியம் ராம்நகர் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு திடீரென வருகை வந்து சோதனை நடத்தினர். ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
ஆர்.டி.ஓ., அதிகாரி சிவகுமார், உதவியாளர் ரஜித்குமார், இடைத்தரகர் சதீஷ் ஆகியோரை, கைது செய்தனர். இவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். முறைகேடான ஆவணங்களை கைப்பற்றினர்.
ஆர்.டி.ஓ., அதிகாரி சிவகுமார், நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசி நாளன்று பணியை முடித்துக் கொண்டு, வீட்டுக்கு செல்லத் தயாரான இவருக்கு, லோக் ஆயுக்தா அதிகாரிகள் 'ஷாக்' கொடுத்தனர்.
பறிமுதல் செய்த வாகனங்களின் ஆவணங்களை, மற்றவருக்கு விற்றது; பழைய டிராக்டர்களுக்கு புதிய ஆவணங்களை உருவாக்கியது; 2,000 டிராக்டர்களுக்கு புதிய ஆவணங்களை அளித்தது என பல முறைகேடுகள் நடந்திருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.