அமைச்சர் சதீஷ் மீது தொண்டர்கள் அதிருப்தி
அமைச்சர் சதீஷ் மீது தொண்டர்கள் அதிருப்தி
அமைச்சர் சதீஷ் மீது தொண்டர்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 09, 2024 04:02 AM
பெங்களூரு,; அதானி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி மற்றும் தொகுதி தொண்டர்களை, வாய்க்கு வந்தபடி விமர்சிக்கும், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு, தொண்டர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில், பெலகாவி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மிருணாள் தோல்வி அடைந்தார். இது, பெலகாவி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேட்பாளர்களை வெற்றி பெறவைக்காவிட்டால், அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என, மேலிடம் எச்சரித்திருந்தது. இதனால் சதீஷ் கலக்கத்தில் இருக்கிறார்.
“அதானி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., லட்சுமண் சவதியும், தொண்டர்களும் சரியாக பணியாற்றாததே, கட்சி வேட்பாளரின் தோல்விக்கு காரணம்,” என, சதீஷ் குற்றஞ்சாட்டுகிறார்.
இது தொடர்பாக, பெலகாவியில் காங்கிரஸ் தொண்டர்கள் கூறியதாவது:
அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மீது,எங்களுக்கு மதிப்பு உள்ளது.
ஆனால் அவர் தன் தவறுகளை மூடி மறைக்கும் நோக்கில், தொண்டர்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.
சிக்கோடி தொகுதியில், ஹாலுமதா சமுதாய வேட்பாளருக்கு, சீட் கொடுப்பதாக சதீஷ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவர், வாக்கு தவறியதால், கோபமடைந்த சமுதாயத்தினரை சமாதானம் செய்து, காங்கிரசுக்கு ஓட்டுப் போட வைத்தது தொண்டர்களான நாங்கள்.
சிக்கோடி லிங்காயத்துக்கு, செல்வாக்குள்ள தொகுதி. சதீஷ் எத்தனை லிங்காயத் தலைவர்களுக்கு, வாய்ப்பு அளித்தார்.
பெரும்பாலான கிராமங்களின் மக்கள், சதீஷின் மகள் பிரியங்காவை பார்த்ததே இல்லை. எப்படி ஓட்டுப் போடுவது என, எங்களிடம் கேட்டனர்.
வேறு தொகுதிகளில் ஓட்டுகள் குறைந்ததாக கூறும் சதீஷ், தனக்கு செல்வாக்குள்ள அரபாவி, கோகாக் தொகுதிகளில் எவ்வளவு ஓட்டுகள் பெற்று கொடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.