Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பஸ் டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் ராமலிங்கரெட்டி பதில் 

பஸ் டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் ராமலிங்கரெட்டி பதில் 

பஸ் டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் ராமலிங்கரெட்டி பதில் 

பஸ் டிக்கெட் கட்டணம் உயர்வு? அமைச்சர் ராமலிங்கரெட்டி பதில் 

ADDED : ஜூன் 09, 2024 04:01 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு ; கர்நாடகாவில் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுமா என்பதற்கு, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி பதில் அளித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று, போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி அளித்த பேட்டி:

லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் காங்கிரஸ் குறைந்த இடங்களில், வெற்றி பெற்றுள்ளது. ஐந்து வாக்குறுதிகள் அமலில் இருந்தும், குறைந்த இடத்தில் வெற்றி பெற்றதால், சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.

லோக்சபா தேர்தலில் ஓட்டுகளை வாங்க வேண்டும் என்பதற்காக, வாக்குறுதித் திட்டங்களை அரசு அமல்படுத்தவில்லை.

மத்திய அரசின் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில், ஐந்து வாக்குறுதித் திட்டங்களை கொண்டு வந்தோம். எக்காரணம் கொண்டும், வாக்குறுதித் திட்டங்களை நிறுத்த மாட்டோம்.

காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருக்கும் வரை, கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அமலில் இருக்கும்.

எரிபொருள், உதிரிபாகங்கள் விலை அதிகரித்து உள்ளன. இதனால் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படலாம் என, கடந்த சில தினங்களாக பேச்சு அடிபடுகிறது.

ஆனால் பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும்படி, போக்குவரத்துக் கழகங்களிடம் இருந்து, இதுவரை அரசுக்கு கோரிக்கை வரவில்லை. பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் திட்டமும், அரசிடம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us