விஷ்ணுபாதம், மஹாபோதி கோவில்களை மேம்படுத்த திட்டம்
விஷ்ணுபாதம், மஹாபோதி கோவில்களை மேம்படுத்த திட்டம்
விஷ்ணுபாதம், மஹாபோதி கோவில்களை மேம்படுத்த திட்டம்
ADDED : ஜூலை 24, 2024 01:36 AM
சுற்றுலா எப்போதும் நம் நாகரிகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. நம் நாட்டை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். முதலீடுகள் அதிகரித்து பொருளாதார வாய்ப்புகள் பெருகும். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பீஹாரின் கயாவில் உள்ள விஷ்ணுபாதம் கோவில், புத்தகயாவில் உள்ள மஹாபோதி கோவில் நடைபாதைகளில் விரிவான வளர்ச்சி மேற்கொள்ளப்படும்.
புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் நடைபாதையை முன்மாதிரியாக வைத்து உலகத்தரம் வாய்ந்த அளவில் இந்த கோவில்களில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
ஹிந்துக்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் வணங்கும் ராஜ்கிர் கோவிலின் தரம் உயர்த்தப்படும். நாளந்தா பல்கலையை மேலும் தரம் உயர்த்தும் வகையில், சுற்றுலா மையமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கை அழகு, கோவில்கள், நினைவு சின்னங்கள், புராதன அமைப்புகள் உடைய ஒடிசா மாநிலத்திலும் சுற்றுலா தொடர்பான வளர்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஷ்ணுபாதம் கோவில் பீஹார் மாநிலம் கயாவில் பால்கு ஆற்றின் கரையில் உள்ளது. கடவுள் விஷ்ணு பாதம் படிந்ததாக நம்பப்படும் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
மஹாபோதி கோவில், பீஹார் மாநிலம் புத்தகயாவில் அமைந்துள்ளது. புத்தர் ஞானம் பெற்ற இடமாக, கோவிலுக்கு அருகே புனிதமாகக் கருதப்படும் போதி மரம் உள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இந்த கோவில் இடம் பெற்றுள்ளது.