வால்மீகி ஆணைய முறைகேடு சி.பி.ஐ., விசாரணை நடக்குமா?
வால்மீகி ஆணைய முறைகேடு சி.பி.ஐ., விசாரணை நடக்குமா?
வால்மீகி ஆணைய முறைகேடு சி.பி.ஐ., விசாரணை நடக்குமா?
ADDED : ஜூன் 02, 2024 09:37 PM

பெங்களூரு: 'வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கை, தேவைப்பட்டால் சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு ஒப்படைக்கும்,'' என்று, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறி உள்ளார்.
கர்நாடக கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் நிர்வாக இயக்குனர், கணக்கு அதிகாரி கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முதல்கட்ட விசாரணையை அறிக்கையை, விரைவில் சமர்ப்பிக்கும்படி விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை சரியான பாதையில் செல்கிறது. தேவைப்பட்டால் சி.பி.ஐ., விசாரணைக்கு அரசு ஒப்படைக்கும்.
எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர் என்பதற்காக, நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா.
இது முதல்வரின் முடிவுக்கு உட்பட்ட விஷயம். கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்ததாரர் பி.எஸ்., கவுடர் தற்கொலை செய்து உள்ளார். மரண கடிதத்தில் சில தனிப்பட்ட பிரச்னைகளும் உள்ளதாக கூறி உள்ளார்.
பா.ஜ., ஆட்சியில் கல்யாண கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அதை சரிசெய்யும் வேலையை நாங்கள் செய்கிறோம். பா.ஜ., ஆட்சியில் எஸ்.ஐ., தேர்வு முறைகேடு நடந்தது. இது பற்றி அந்த கட்சி எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் பேச மறுப்பது ஏன். பா.ஜ.,வினருக்கு தலித் மக்கள் மீது திடீர் காதல் ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் 100 இடங்களை தாண்டாது. பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்று, கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் அது பொய்யானது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என்று வெளியாகி உள்ள, கருத்து கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை. 'இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.