மத்திய அமைச்சர் குமாரசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம்
மத்திய அமைச்சர் குமாரசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம்
மத்திய அமைச்சர் குமாரசாமி திருப்பதியில் சுவாமி தரிசனம்
ADDED : ஜூன் 16, 2024 07:40 AM
மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி, திருப்பதி ஏழுமலையானை நேற்று தரிசனம் செய்தார்.
லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் வென்ற குமாரசாமி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், கனரக தொழிற் துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
எம்.பி.,யாக டில்லிக்குச் சென்று, மத்திய அமைச்சராக பெங்களூரு திரும்பிய குமாரசாமிக்கு, நேற்று முன் தினம் ம.ஜ.த., - பா.ஜ., தொண்டர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். நேற்று முன் தினம் இரவு, குடும்பத்துடன் ஆந்திராவின் திருப்பதிக்கு சென்றார். நேற்று அதிகாலை ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அதன்பின் பெங்களூருக்கு திரும்பினர். நேற்று மாலை மாண்டியாவுக்கு சென்றார். அங்கு எம்.பி., அலுவலகத்தை திறந்துவைத்தார்.
மத்திய அமைச்சரான பின், முதன்முறையாக குமாரசாமி மாண்டியாவுக்கு வருகை தந்ததால், அவருக்கு ம.ஜ.த., தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்
.- நமது நிருபர் -