Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சுற்றுலா துறையில் முதலீடு அதிகரிக்க புதிய கொள்கை தென்னிந்திய திருவிழாவில் துணை முதல்வர் அறிவிப்பு

சுற்றுலா துறையில் முதலீடு அதிகரிக்க புதிய கொள்கை தென்னிந்திய திருவிழாவில் துணை முதல்வர் அறிவிப்பு

சுற்றுலா துறையில் முதலீடு அதிகரிக்க புதிய கொள்கை தென்னிந்திய திருவிழாவில் துணை முதல்வர் அறிவிப்பு

சுற்றுலா துறையில் முதலீடு அதிகரிக்க புதிய கொள்கை தென்னிந்திய திருவிழாவில் துணை முதல்வர் அறிவிப்பு

ADDED : ஜூன் 16, 2024 07:41 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு: ''சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு கர்நாடக அரசு தயாராக இருக்கிறது. அதிக முதலீடு ஈர்க்கும் வகையில், புதிய சுற்றுலா கொள்கை அமல்படுத்தப்படும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் அறிவித்தார்.

கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், எப்.கே.சி.சி.ஐ., எனும் கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் கர்நாடக சுற்றுலா துறை இணைந்து, பெங்களூரு அரண்மனை மைதானத்தில், இரண்டு நாட்களுக்கான 'தென்னிந்திய திருவிழா - 2024' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவை நேற்று துவக்கிவைத்து, துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு கர்நாடக அரசு தயாராக இருக்கிறது. அதிக முதலீடு ஈர்க்கும் வகையில், புதிய சுற்றுலா கொள்கை அமல்படுத்தப்படும்.

வேலை வாய்ப்பு


இதனால், தொழில்துறை உயர்ந்து, வேலை வாய்ப்பு பெருகி, அரசு வலுவடையும். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்துள்ள பிரதிநிதிகள், அவரவர் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கர்நாடகாவில், 300 கி.மீ., கடலோர பகுதிகளை கொண்டுள்ளது. இதன் மூலம், கடல்சார் தொழில் மேம்படுத்த ஆலோசனை வழங்குங்கள்.

பெங்களூரு, ஐ.டி., - பி.டி., உட்பட பல்வேறு துறைகளில் வலுவாக உள்ளன.

இத்துடன், நகருக்கு சுற்றுலா பயணியர் வருகையை அதிகப்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

விரைவில் டெண்டர்


முன்பு எல்லாம், லால்பாக், கப்பன் பூங்கா, பலரை ஈர்த்தது.

தற்போதைய புதிய தலைமுறையினருக்கு, அவர்களுக்கு ஏற்றார் போல் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். அந்த வகையில், உயர் கோபுரம் அமைக்க விரைவில் டெண்டர் கோரப்படும்.

பிருந்தாவன் பூங்கா, டிஸ்னிலாண்ட் போன்ற பொழுது போக்கு பூங்காவும் அமைக்கப்படும். பட்ஜெட்டில் நிதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கர்நாடக சுற்றுலா துறை இயக்குனர் ராம்பிரசாத் மனோகர், எப்.கே.சி.சி.ஐ., தலைவர் ரமேஷ் சந்திர லொஹட்டி, துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணா, உமாரெட்டி, தென்னிந்திய திருவிழாவின் ஆலோசகர் சிவசண்முகம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சுற்றுலா தொடர்பான ஸ்டால்களில் மக்கள் குவிந்தனர். இன்றும் விழா நடப்பதால், பலர் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக கடலோரத்தில், சுற்றுலா மேம்படுத்த 40 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 25,000க்கும் அதிகமான புராதன சின்னங்கள் உள்ளன. இதில், 500 சின்னங்களை மட்டுமே பாதுகாத்து வருகிறோம். மற்ற சின்னங்களை பாதுகாக்க, யார் வேண்டுமானாலும் தத்தெடுக்கலாம்.

எச்.கே.பாட்டீல்,

அமைச்சர்,

சுற்றுலா துறை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us