Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இன்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 28 தொகுதிகளின் 474 வேட்பாளர்கள் திக்... திக்...

இன்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 28 தொகுதிகளின் 474 வேட்பாளர்கள் திக்... திக்...

இன்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 28 தொகுதிகளின் 474 வேட்பாளர்கள் திக்... திக்...

இன்று லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 28 தொகுதிகளின் 474 வேட்பாளர்கள் திக்... திக்...

ADDED : ஜூன் 04, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. கர்நாடகாவில் 28 தொகுதிகளின் 474 வேட்பாளர்களின் அரசியல் தலை எழுத்து இன்று முடிவாகிறது. தேர்தல் முடிவுகள் என்ன ஆகுமோ என்று வேட்பாளர்கள் திக் திக் மன நிலையில் உள்ளனர்.

கர்நாடகாவில், 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 26ம் தேதி 14 தொகுதிகளுக்கும், மே 7ம் தேதி 14 தொகுதிகளுக்கும் என இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது.

முதல் கட்ட தேர்தலில், 69.56 சதவீதம்; இரண்டாம் கட்ட தேர்தலில், 71.84 சதவீதம் ஓட்டுகளும் பதிவாகி இருந்தது. காங்கிரஸ் - 28 தொகுதிகளில் தனித்தும்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ., - 25 தொகுதிகளிலும், ம.ஜ.த., - 3 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

தபால் ஓட்டுகள்


நாடு முழுதும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதற்காக, கர்நாடகாவில் 28 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7:45 மணிக்கு, வேட்பாளர்கள் அல்லது அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஏஜென்ட்கள் முன்னிலையில், பாதுகாப்பு அறை திறக்கப்படுகின்றன.

பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் அறைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சரியாக 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும். முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதற்காக, 28 தொகுதிகளில் மொத்தம் 334 மேசைகள் போடப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, ஷோபா, பகவந்த் கூபா; முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, ஜெகதீஷ் ஷெட்டர்; முன்னாள் துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, கோவிந்த் கார்ஜோள்; முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, முன்னாள் முதல்வர் பங்கராப்பாவின் மகள் கீதா சிவராஜ்குமார்; மன்னர் யதுவீர் உட்பட அமைச்சர்கள், மூத்த தலைவர்களின் வாரிசுகள் என மொத்தம் 474 வேட்பாளர்களின் தலை எழுத்து இன்று நிர்ணயிக்கப்படுகிறது.

மதுவுக்கு தடை


முன்னெச்சரிக்கையாக ஓட்டு எண்ணும் மையங்களை சுற்றி துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும், இன்று காலை 6:00 மணி முதல், நள்ளிரவு 12:00 மணி வரை மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே வேளையில், யாத்கிர் மாவட்டம், சுர்பூர் சட்டசபை தொகுதிக்கு, மே 7ம் தேதி நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளும் இன்று எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் என்ன ஆகுமோ என்று வேட்பாளர்கள் திக் திக் மன நிலையில் உள்ளனர்.

உடனுக்குடன் முடிவுகள்


ஓட்டு எண்ணிக்கை விபரங்களை, https://results.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். ஓட்டர் ஹெல்ப்லைன் என்ற மொபைல் செயலி மூலம் பார்க்கலாம். ஒவ்வொரு தொகுதியிலும், சுற்று வாரியாக இணையதளத்தில் முடிவுகள் பதிவேற்றம் செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us