காட்டு காளான் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பலி
காட்டு காளான் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பலி
காட்டு காளான் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பலி
ADDED : ஜூன் 02, 2024 11:43 PM
ஷில்லாங் : வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் சம்பாய் கிராமம் உள்ளது. மலைக் கிராமமான இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அப்பகுதி யில் விளைந்த காட்டு காளான்களை சமீபத்தில் சமைத்து சாப்பிட்டனர்.
இதனால், மூன்று குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்கள் ரிவன்சகா சுசியாங், 8, கிட்லாங் சுசியாங், 12, மற்றும் வான்சலான் சுசியாங், 15, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த குழந்தைகளின் தாய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இரு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவர்களில் ஒரு சிலருக்கு கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை பாதிப்புஅடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதில், பெரும்பாலானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், 'காட்டு காளான்கள் மிகவும் ஆபத்தானவை. கிராமப்புறங்களில் உள்ளவர்கள் எந்த வகையான காளான்களை சாப்பிட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.