இவர்கள் தான் உங்கள் தொகுதி எம்.பி.,!
இவர்கள் தான் உங்கள் தொகுதி எம்.பி.,!
இவர்கள் தான் உங்கள் தொகுதி எம்.பி.,!
ADDED : ஜூன் 04, 2024 11:21 PM
லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் அதிகபட்சமாக, உத்தர கன்னடா பா.ஜ., வேட்பாளர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, 3,37,428 ஓட்டுகள் வித்தியாசத்திலும்; குறைந்தபட்சமாக, தாவணகெரே காங்கிரஸ் வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுன், 26,094 ஓட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
இதுபோன்று, பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத், அதிக பட்சமாக 10,79,002 ஓட்டுகள் பெற்று முதல் இடத்திலும்; தாவணகெரே காங்., வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுன், குறைந்தபட்சமாக, 6,33,059 ஓட்டுகள் பெற்று கடைசி இடத்திலும் உள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய பெரும்பாலான லோக்சபா தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பாக சிக்கபல்லாப்பூரில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 7ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனால், பா.ஜ.,வின் சுதாகர் 1,63,460 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பா.ஜ.,வின் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், சோமண்ணா, மஞ்சுநாத், யதுவீர், சுதாகர், பிரிஜேஸ் சவுடா, கோவிந்த் கார்ஜோள், கோட்டா சீனிவாச பூஜாரி, விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி ஆகிய 10 பேரும்; காங்கிரசின் பிரியங்கா ஜார்கிஹோளி, ராதாகிருஷ்ணா...
குமார் நாயக், சாகர் கன்ட்ரே, ராஜசேகர் பசவராஜ் ஹிட்னால், துக்காராம், பிரபா மல்லிகார்ஜுன், சுனில் போஸ் ஆகிய 9 பேரும்; ம.ஜ.த.,வின் மல்லேஸ்பாபு என மொத்தம் 20 பேர் முதல் முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ளனர். மீதி எட்டு பேர் ஏற்கனவே எம்.பி.,யாக பதவி வகித்தவர்கள்.
கர்நாடகாவில் இருந்து மத்திய அமைச்சர்களாக உள்ள பிரஹலாத் ஜோஷி, ஷோபா மற்றும் குமாரசாமி, மஞ்சுநாத், பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் உட்பட ஐந்தாறு பேர் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
- நமது நிருபர் -