ADDED : ஜூலை 28, 2024 11:27 PM

வளரும் பாரதத்துக்கு வளரும் மாநிலங்களின் ஆதரவு தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார். என்ன ஓர் ஆழமான கருத்து. பிறகு ஏன் அவரின் அரசு, 2023ல் வெள்ளம் பாதித்த பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை? எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது ஏன் இந்த பாரபட்சம்?
ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்
ஊழல் விசாரணைக்கு தயாரா?
தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் செயல்படுத்தப்பட்ட இலவச புடவை, ஆடு, கே.சி.ஆர்., பெட்டகம் திட்டங்களை சிறப்பான திட்டம் என்கின்றனர். அந்த திட்டங்கள் அனைத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளன. விசாரணைக்கு அவர்கள் தயாரா?
ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்
மம்தாவை அவமதித்து விட்டனர்!
மத்திய பட்ஜெட் எவ்வாறு தயாரிக்கப்பட்டதோ, அதன்படி தான் நிடி ஆயோக்கும் செயல்படும். இதையறிந்து தான் தமிழகம், தெலுங்கானா, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பங்கேற்றார். ஆனால், அவரையும் அவமதித்து விட்டனர்.
சஞ்சய் ராவத், மூத்த தலைவர், சிவசேனா உத்தவ் அணி