ADDED : ஜூலை 08, 2024 06:43 AM

ராய்ச்சூர்: மூவரை தாக்கிய சிறுத்தையை, கிராமத்தினரே அடித்து கொன்று ஆம்புலன்சில் போட்டனர்.
ராய்ச்சூரின் டி.கரடிகுட்டா கிராமத்தில் சில நாட்களாக, சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதை கண்டுபிடிக்கும்படி வனத்துறையிடம், வேண்டுகோள் விடுத்தனர்.
வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்திருந்தனர். சிறுத்தை சிக்காமல் ஆட்டம் காண்பித்தது. கிராமத்தினர் பயத்துடன் நடமாடினர்.
இந்நிலையில் நேற்று காலை கிராமத்தில் புகுந்த சிறுத்தையை விரட்ட முற்பட்டனர். அப்போது, மூவரை தாக்கி சிறுத்தை காயப்படுத்தியது. இதனால் கோபமடைந்த மக்கள், சிறுத்தையை அடித்து கொன்றனர். கால்நடை ஆம்புலன்ஸ் வரவழைத்து, அதில் போட்டு அனுப்பினர்.