மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை
மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை
மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை
ADDED : ஜூலை 08, 2024 06:43 AM
அரசு மருத்துவமனைகளில், மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெங்கு அதிகரிக்கும் நிலையில், மருந்துகள் பற்றாக்குறையால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக தீர்வு காணும்படி, ஒரு வக்கீல், முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, எம்.எஸ்.சி.எல்., எனும் கர்நாடக மருந்துகள் வினியோக கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்டு உள்ள அறிக்கை:
கர்நாடகா மாநிலம் முழுதும் 27 மருந்துகள் டிப்போக்களில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் சேகரிப்பில் உள்ளன. வலி நிவாரண மருந்துகள், வாந்தி, வயிறு எரிச்சலை குணப்படுத்தும் மருந்துகள், டெங்கு ஆன்டிஜன் கிட்கள் உட்பட அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளன. எந்த டிப்போவிலாவது, மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டால், கூடுதல் மருந்துகள் உள்ள டிப்போக்களில் இருந்து, தேவையான மருந்துகள் அனுப்பப்படுகிறது.
அந்தந்த மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை, அனைத்து மருந்துகள் பற்றிய தகவலை, கே.எஸ்.எம்.எஸ்.சி.எல்., தெரிவிக்கிறது. டெங்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளும் உள்ளன.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.