'அயோத்தி ராமர் கோவிலின் பணிகள் தரம் குறையவில்லை'
'அயோத்தி ராமர் கோவிலின் பணிகள் தரம் குறையவில்லை'
'அயோத்தி ராமர் கோவிலின் பணிகள் தரம் குறையவில்லை'
ADDED : ஜூலை 05, 2024 06:18 AM

விஜயபுரா: ''அயோத்தி ராமர் கோவிலின் மேற்கூரை கட்டுமான பணிகள் முடியாததால், மழை பெய்யும் போது கசிகிறதே தவிர, பணிகளின் தரம் குறையவில்லை,'' என பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்லில், ஒவ்வொரு கட்சிகளின் மோசடி, ஆசை, பொறாமையால் அயோத்தியில், பா.ஜ.,வுக்கு தோல்வி ஏற்பட்டது. இந்த தோல்வியை, ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு என, விமர்சிப்பது சரியல்ல.
அயோத்தியில் வறுமை அதிகம் இருப்பதால், வாக்காளர்கள், ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, வேறு கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளனர். இது ஹிந்துகளின் ஆன்மிக உணர்வுக்கு ஏற்பட்ட பின்னடைவு என, கூற முடியாது.
தங்களை ஹிந்துக்கள் என, கூறி கொள்வோர் வன்முறையில் ஈடுபடுவதாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
பொறுமைசாலிகளான ஹிந்துக்களை சீண்ட வேண்டும்; குழப்பத்தை உருவாக்க வேண்டும்; தங்களின் அரசியல் பருப்பை வேக வைக்க வேண்டும் என்ற நோக்கில், இப்படி பேசுகின்றனர். அரசியல் தலைவர்கள், பொறுப்பின்றி பேசக்கூடாது.
அயோத்தி ராமர் கோவிலின் மேற்கூரை கட்டுமான பணிகள் இன்னும் முடியாததால், மழை பெய்யும் போது தண்ணீர் கசிகிறதே தவிர, பணிகளின் தரம் குறையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.