ராணுவ துறை உற்பத்தி மதிப்பு ரூ. 1. 27 லட்சம் கோடியை தாண்டி சாதனை
ராணுவ துறை உற்பத்தி மதிப்பு ரூ. 1. 27 லட்சம் கோடியை தாண்டி சாதனை
ராணுவ துறை உற்பத்தி மதிப்பு ரூ. 1. 27 லட்சம் கோடியை தாண்டி சாதனை
ADDED : ஜூலை 05, 2024 09:44 PM

புதுடில்லி: இந்திய ராணுவ துறையின் உற்பத்தி மதிப்பு 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.1.27 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேக் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ உற்பத்தி துறையில் பல்வேறு கொள்கை சீர்திருத்தங்கள் கொண்டு பட்டது. இதன் மூலம் ராணுவ உற்பத்தியில் உள்நாட்டு தொழிற்சாலைகளை ஊக்குவிக்க, கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
வரும் 2024 - 25ம் நிதியாண்டில், ராணுவ துறை மொத்த உற்பத்தி மதிப்பை ரூ.1.75 லட்சம் கோடியாக உயர்த்த ராணுவ அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் கூறியது, நம் ராணுவத் துறையின் உற்பத்தி மதிப்பு, 2022 - 23ம் நிதியாண்டில் முதல்முறையாக, ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்து 654 கோடியை தாண்டியது.
தற்போது மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக 2023- 2024ம் நிதியாண்டில் ராணுவ துறையின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 1. 27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.