பீஹாரில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவம் ; 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
பீஹாரில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவம் ; 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
பீஹாரில் பாலங்கள் இடிந்து விழும் சம்பவம் ; 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
ADDED : ஜூலை 05, 2024 07:26 PM

பாட்னா : பீஹாரில் இரு வாரங்களில் 12 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாநில முழுதும் 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீஹார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து புதிய மற்றும் பழைய பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் நடைபெற்றன. பாலம் இடிந்து விழும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதையடுத்து பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி 'சாலை கட்டுமானம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்கப்பட வேண்டிய பாலங்களை அடையாளம் காண வேண்டும்' என, முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பீஹார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலர் சைதன்ய பிரசாத் கூறியது, மாநிலம் முழுதும் இதுவரை 10 இடங்களில் பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சரண் மாவட்டத்தில் 3 பாலங்கள் இடிந்துள்ளன. தவிர சிவான், மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரான், கிஷன்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் பாலங்கள் இடிந்தன. இச்சம்பவம் தொடர்பாக மாநில முழுதும் 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பாலங்கள் இடிந்து விழுந்ததற்கு ஒப்பந்தகாரர்களே முழு பொறுப்பு என்றார்.