'குட்கா' வாங்கி வராத கோபம் சிறுமியை கொன்றவர் கைது
'குட்கா' வாங்கி வராத கோபம் சிறுமியை கொன்றவர் கைது
'குட்கா' வாங்கி வராத கோபம் சிறுமியை கொன்றவர் கைது
ADDED : ஜூன் 17, 2024 04:23 AM

கொப்பால், : 'குட்கா' வாங்கி வாரத 7 வயது சிறுமியை கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர், இரண்டு மாதத்துக்கு பின், போலீசாரிடம் சிக்கினார்.
கொப்பாலின் கின்னாலா கிராமத்தில் வசிப்பவர் ராகவேந்திரா மடிவாளா. இவரது மகள் அனுஸ்ரீ, 7. ஏப்ரல் 19ல் மதியம் காணாமல் போனார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே கொப்பால் ஊரக போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். போலீசார் தேடி வந்தனர்.
இரண்டு நாட்களுக்கு பின், சிறுமியின் வீட்டு அருகில் உள்ள பாழடைந்த வீட்டுக்குள் துர்நாற்றம் வீசியது. போலீசார், அந்த வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அங்கு அனுஸ்ரீயின் உடல் கிடந்தது. அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கொலையாளியை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் வெளியான தகவல்கள்:
சம்பவம் நடந்த நாளன்று, சிறுமி வீட்டின் சுற்றுப்பகுதியில் வசிக்கும் பலரும், திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்; வீட்டில் யாரும் இருக்கவில்லை. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்தலிங்கையா, 51, குடிபோதையில் வீட்டில் இருந்துள்ளார்.
தன் சகோதரருடன் ஏற்பட்ட சண்டையில், காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், அவரால் வேகமாக நடக்க முடியாமல் இருந்தார்.
சம்பவத்தன்று காலை, சிறுமி அனுஸ்ரீயை அழைத்து, கடையில், 'குட்கா' வாங்கி தரும்படி சித்தலிங்கையா கூறி உள்ளார். அவரும் வாங்கி கொடுத்தார்.
மதியம் மீண்டும் குட்கா வாங்கி தரும்படி கேட்டார்; சிறுமி மறுத்தார். இதனால் கோபமடைந்த சித்தலிங்கையா, பக்கத்தில் இருந்த கட்டையால் சிறுமியின் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் உயிரிழந்தார்.
பீதியடைந்த சித்தலிங்கையா, சிறுமியின் உடலை கோணிப்பையில் வைத்து, தன் வீட்டின் பின்புறம் வைத்தார். துர்நாற்றம் வீசியதால் பாழடைந்த வீட்டில் போட்டுள்ளார்.