Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவர்

கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவர்

கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவர்

கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை தாக்கிய கணவர்

ADDED : ஜூலை 08, 2024 06:27 AM


Google News
மாதநாயக்கனஹள்ளி: கள்ளக்காதலை தட்டி கேட்டதால் மனைவியை தாக்கிய கணவர், அவருக்கு உடந்தையாக இருந்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே சிக்கபிதரஹல்லுவில் வசிப்பவர் ஹர்ஷோத்தம், 38. இவரது மனைவி ஷில்பா, 35. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 8 வயதில் மகன் உள்ளார்.

மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக ஹர்ஷோத்தம் வேலை செய்கிறார். அங்கு வேலை செய்யும் ரிது, 34 என்ற பெண்ணுக்கும், ஹர்ஷோத்தமுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இவ்விஷயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷில்பாவுக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடும்படி கணவரிடம் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை.

இந்நிலையில், வார இறுதி நாட்களில் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, ஹர்ஷோத்தம் மது குடித்துள்ளார்.

ஷில்பாவையும் மது குடிக்க வற்புறுத்தி உள்ளார். அவர் மறுப்பு தெரிவித்ததால், மது பாட்டில்களை வீட்டிற்குள் போட்டு உடைத்துள்ளார்.

மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி தொல்லை கொடுத்துள்ளார். 'வரதட்சணை வாங்கி வராவிட்டால் நீ தற்கொலை செய்து செத்துவிடு. ரிதுவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்' என்றும் ஷில்பாவிடம், ஹர்ஷோத்தம் கூறியுள்ளார்.

இதுபற்றி ஹர்ஷோத்தமின் தந்தை சின்னகவுடா, தாய் புட்டம்மா, மைத்துனி ஸ்ருதி ஆகியோரிடம், ஷில்பா கூறியுள்ளார். அவர்கள் எதையும் கண்டு கொள்ளாமல், ஹர்ஷோத்தமுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த ஷில்பா, ஹர்ஷோத்தம், அவரது பெற்றோர், தங்கை, கள்ளக்காதலி மீது மாதநாயக்கனஹள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us