ADDED : ஜூலை 12, 2024 07:03 AM
தேவனஹள்ளி: தேவனஹள்ளி அருகே ராமுஹள்ளி கிராமத்தின் லோகேஷ், 35, ராம்நகர் கனகபுராவின் முத்துராஜ், 35. பெங்களூரு ரூரல், தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய டாக்சி ஸ்டாண்டில் வேலை செய்தனர். லோகேஷிடம் முத்துராஜ் 5,000 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால், கடனை திரும்ப கொடுக்கவில்லை.
நேற்று முன்தினம் இரவு கடனை திருப்பி தரும்படி, முத்துராஜிடம் லோகேஷ் கேட்டார். அப்போது இருவர் இடையிலும் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த முத்துராஜ், சாவி கொத்தில் இருந்த சிறிய கூர்மையான கத்தியால், லோகேஷ் நெஞ்சில் பலமாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே லோகேஷ் இறந்தார். விமான நிலைய போலீசார், முத்துராஜை கைது செய்தனர்.