பல்லாரிக்கு அடையாளமாக இருக்கும் கோட்டை
பல்லாரிக்கு அடையாளமாக இருக்கும் கோட்டை
பல்லாரிக்கு அடையாளமாக இருக்கும் கோட்டை
ADDED : ஜூன் 20, 2024 06:05 AM

பல்லாரிக்கு அடையாளமாக, கடல் மட்டத்தில் இருந்து 1976 அடி உயரத்தில், மலை மீது அமைந்துள்ளது, 'பல்லாரி கோட்டை'. 3.5 கி.மீ., சுற்றளவில் உள்ள மலை மீதுள்ள இந்த கோட்டை, விஜயநகர பேரரசு ஆட்சிக்கு உட்பட்ட ஹனுமப்பா நாயகா ஆட்சி காலமான 1565ல் கட்டப்பட்டது.
கோட்டையை சுற்றியுள்ள தடுப்புகள், கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளன.
மலையின் மீது இரண்டு கோட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. ஒன்று, மேல் கோட்டை மற்றும் கீழ் கோட்டை என்று அழைக்கின்றனர்.
மேல் கோட்டையை, ஹனுமப்பா நாயகா கட்டியுள்ளார். அதன்பின், 1775ல் ஹைதர் அலி, இந்த கோட்டையை பிடித்தார்.
அவருக்கு பின், 1792ல் இந்த கோட்டையை, பிரெஞ்சு பொறியாளர் மூலம் சீரமைத்து, கீழ் கோட்டை கட்டினார்.
பல்லாரி கோட்டையை விட, அருகில் உள்ள கும்பாரா கோட்டை உயரமாக இருந்ததால், கோட்டையின் ரகசியம் காக்க, பொறியாளர் துாக்கிலிடப்பட்டார். அவரின் கல்லறை, கோட்டையின் கிழக்கு நுழைவு வாயில் அருகில் உள்ளது.
மேல் கோட்டையில் கோவில், படை வீரர்களுக்கான அரண்மனைகள், நீர் சேமிப்புக்கான ஆழ்துளை கிணறுகள் உள்ளன.
கீழ் கோட்டையில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஒவ்வொன்றிலும் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன.
கீழ் கோட்டை, பலமாக கட்டப்பட்டு உள்ளது.
எதிரிகளிடம் இருந்து கோட்டையை பாதுகாக்க, ஆங்காங்கே ஆழமான குழிகளில் நீர் நிரப்பி, முதலைகளை விட்டுள்ளனர்.
அத்துடன் கோட்டே ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. போர் ஏற்பட்டால், அடைக்கலம் தேடி வருவோருக்கென தனி இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து பல்லாரி நகருக்கு ரயில், பஸ்களில் செல்லலாம். அங்கிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் பல்லாரி கோட்டை அமைந்துள்ளது. ஆட்டோவில் அங்கு செல்லலாம்.
விமானத்தில் செல்பவர்கள், ஜிந்தால் விஜயநகரா விமான நிலையத்துக்கு செல்லலாம். அங்கிருந்து 35 கி.மீ., தொலைவில் உள்ள கோட்டைக்கு பஸ், டாக்சியில் செல்லாம். பல்லாரியில் பட்ஜெட்டுக்கு தகுந்தபடி பல ஹோட்டல்கள் உள்ளன.
� பல்லாரியின் அடையாளமாக காட்சி அளிக்கும் கோட்டை. � எதிரிகளிடம் இருந்து தப்பிக்க கோட்டைக்குள் அமைக்கப்பட்டுள்ள அகழிகள்
.- நமது நிருபர் -