மத்திய பட்ஜெட் ஆலோசனை அமைச்சரை அனுப்பும் முதல்வர்
மத்திய பட்ஜெட் ஆலோசனை அமைச்சரை அனுப்பும் முதல்வர்
மத்திய பட்ஜெட் ஆலோசனை அமைச்சரை அனுப்பும் முதல்வர்
ADDED : ஜூன் 20, 2024 05:48 AM
பெங்களூரு: மத்திய அரசு பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகிறது. பட்ஜெட் முன்னேற்பாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அழைப்பு விடுத்து, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் எழுதியுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. ஜூன் 22ல் டில்லியில் பட்ஜெட் குறித்து, ஆலோசனை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும்படி, அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் எழுதியுள்ளார்.
அதேபோன்று, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் தனக்கு பதிலாக, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவை, டில்லிக்கு அனுப்ப முதல்வர் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து, நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் சித்தராமையா எழுதியுள்ள கடிதத்தில், 'பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க, எனக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. ஜூன் 22ல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டியுள்ளது. எனவே என்னால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. எனக்கு பதிலாக அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா பங்கேற்பார்' என தெரிவித்துள்ளார்.