ரூ.2.50 லட்சத்தை ஒப்படைத்த பேருந்து நடத்துனர், ஓட்டுனர்
ரூ.2.50 லட்சத்தை ஒப்படைத்த பேருந்து நடத்துனர், ஓட்டுனர்
ரூ.2.50 லட்சத்தை ஒப்படைத்த பேருந்து நடத்துனர், ஓட்டுனர்
ADDED : ஜூன் 20, 2024 05:46 AM
ராய்ச்சூர்: பஸ்சில் பயணி விட்டு சென்ற 2.5 லட்சம் ரூபாயை, மீண்டும் அவரிடேம பஸ் நடத்துனர், ஓட்டுனர் திருப்பி ஒப்படைத்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஹூப்பள்ளியில் இருந்து ஹைதராபாதுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ராய்ச்சூரில் பஸ்சில் ஏறிய சோமசேகர், ஹைதராபாத் சென்றார்.
இறங்கும் அவசரத்தில் பணம் இருந்த பையை மறந்து விட்டு சென்றுவிட்டார். பஸ் ஹைதராபாத் சென்றடைந்ததும், நடத்துனர், ஓட்டுநர் சோதனையிட்டபோது, 2.50 லட்சம் ரூபாய் இருந்த பணப்பையை பார்த்தனர்.
அதில் இருந்த மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினர். நேற்று ஹைதராபாத்தில் இருந்து திரும்புவதாக தெரிவித்தார். சொன்னபடி நேற்று ராய்ச்சூரில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலைய அலுவலகத்துக்கு சோமசேகர் பாட்டீல் வந்தார்.
அப்போது பஸ் ஓட்டுனர் ஹனுமந்தராயா, நடத்துனர் மஞ்சுநாத் ஆகியோர், பணப்பையை, சோமசேகர பாட்டீலிடம் ஒப்படைத்தனர். ஓட்டுநர், நடத்துனரின் நேர்மையை பயணியரும், அதிகாரிகளும் பாராட்டினர்.