பத்திரிகை வினியோகஸ்தர்கள் கோரிக்கை முதல்வரின் ஊடக ஆலோசகர் உறுதி
பத்திரிகை வினியோகஸ்தர்கள் கோரிக்கை முதல்வரின் ஊடக ஆலோசகர் உறுதி
பத்திரிகை வினியோகஸ்தர்கள் கோரிக்கை முதல்வரின் ஊடக ஆலோசகர் உறுதி
ADDED : ஜூன் 20, 2024 05:45 AM

பெங்களூரு: ''பத்திரிகை வினியோகஸ்தர்களின் வேண்டுகோளை, மாநில அரசு பரிசீலனை செய்யும்,'' என, முதல்வரின் ஊடக ஆலோசகர் பிரபாகர் தெரிவித்தார்.
கர்நாடக பத்திரிகை வினியோகஸ்தர் சங்கத்தின், மாநில தலைவர் சிவானந்த தகடூரு, கர்நாடக பத்திரிகை வினியோகஸ்தர் கூட்டமைப்பு தலைவர் ஷம்பு லிங்கா ஆகியோர், பெங்களூரின் விதான் சவுதாவில், முதல்வரின் ஊடக ஆலோசகர் பிரபாகரை சந்தித்தனர்.
சித்ரதுர்காவில் நடக்கவுள்ள, பத்திரிகை வினியோகஸ்தர் தின நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவரும் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் என, உறுதி அளித்தார்.பின், பிரபாகர் அளித்த பேட்டி:
ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதிபடி, பத்திரிகை வினியோகஸ்தர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் பல சலுகைகள் அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை போடும் போது, விபத்தில் இறந்தால், காயமடைந்தால் முதல்வர் நிவாரணம் அறிவித்தார். இந்த திட்டத்தை செயல்படுத்தினார். பத்திரிகை வினியோகஸ்தர்களுக்கு, வீட்டுமனை வழங்கப்படும்.
தொழில்நுட்ப காரணங்களால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை வருவாய்த் துறை கவனத்துக்கு கொண்டு சென்று, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.