ADDED : ஜூன் 14, 2024 07:44 AM
தீராத வருத்தம்!
கனரக வாகனங்களை தயாரிக்கிற பெரிய தொழிற்சாலையின் மணி விழாவில், தொழிலாளிகளுக்கு 8 கிராம் தங்கம் வழங்கினாங்க. மைசூரில் குதுாகலமா கொண்டாடினாங்க. இந்த கம்பெனியின் தற்காலிக தொழிலாளர்களுக்கு, ஒரு சின்ன கிப்ட் கூட வழங்கலன்னு சொல்லி, மூன்று கட்டமா அதிருப்தியை வெளிப்படுத்தினாங்க. ஆனா, நிர்வாகம், கண்டுக்கவே இல்லையாம்.
மணி விழாவுக்காக கிப்ட் உட்பட செலவுகளுக்கு பல கோடி என செலவு எகிறியிருக்காம். இதனால, தற்காலிக ஊழியர்கள் ரொம்பவும் வருந்துறாங்களாம்.
சங்க தேர்தலுக்கு தயார்!
தங்கமான சிட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது நீதிமன்றம். இங்குள்ள வக்கீல்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்த மும்முரமாக வேலைகள் நடக்குது. எதிர்க்கிறவங்களுக்கு ஓட்டுரிமையே இல்லாமல் செய்யும் வேலைகள் நடத்தி, சங்க உறுப்பினராக இருக்கும் உங்களை ஏன் நீக்க கூடாதென சிலருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. நீக்காதபடி பதிலும் வந்திடுச்சாம்.
பகிரங்கமாக விமர்சனம் செய்த ஒரு பெரிய தலைவருக்கு நோட்டீஸ் கொடுக்கலயாம். ஏன்னு கேள்வி எழுந்திருக்கு. சங்கத் தேர்தலில் மூன்று அணிகள் தயாராகி வருதாம். அணியில் இருந்தாலும், சிங்கிள் ஓட்டு கேட்டு, தாங்கள் மட்டும் ஜெயிச்சா போதுமென்ற நபர்களும் இருக்காங்க. இத்தகையவர்கள் ஓட்டு தராசு, சாதகமா இருக்காது என்கிறாங்க.
உருவாகுது பலமான கோஷ்டி!
பெரிய தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை நழுவ விட்ட கை கட்சி வேட்பாளர், கோல்டு சிட்டியில் அடிக்கடி தலைகாட்ட தொடங்கிட்டாரு. இவருக்கென தனி கோஷ்டியும் உருவாகிடுச்சு.
கவுன்சிலர் ஒருவரின் பர்த்டே பங்ஷனுக்கு வந்தாரு. அதற்கடுத்து முன்னாள் முனிசி., தலைவரோட இல்ல திருமண விழாவுக்கும் வந்தாரு. இந்த ரெண்டு விழாவுக்கும் அசெம்பிளி மேடம் 'ஆப்சென்ட்' ஆகிட்டாங்க.
அசெம்பிளிக்காரரை மட்டுமே இதுவரை பெண் புலி, பெண் சிங்கம்னு வர்ணனை ஓவராக கூவி தாளம் போட்டவங்களுக்கு உட்கட்சியில் போட்டி உருவாகிடுச்சி. 'லோக்' தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரு, விரைவில் கோல்டு சிட்டியில் குடிபெயரவும் யோசிக்கிறதா சொல்றாங்க. எதிர்கால அரசியலுக்கு இதுவே அவருக்கு சாதகமான இடமாக இருக்குமென நம்புவதாக அவரின் ஆதரவாளர்கள் கருதுறாங்க.