
தொலைநோக்கு பார்வை!
அப்பாடா, இனி தனக்கு எதிரா அடுத்த அசெம்பிளி தேர்தலில் போட்டி போட புல்லுக்கட்டுகாரர் வரமாட்டாரு.அதனால் தானே, அவர் ஈஸியாபெரிய தேர்தலில்ஜெயித்து செங்கோட்டைக்கு போகட்டும்னு அவருக்கு ஆதரவாக, 'உள்குத்து' வேலைகள் செய்தேன்னு ப.பேட்டை அசெம்பிளிக்காரர்பெருமூச்சு விடுறாராம்.
அடுத்த முறை மருமகன்!
கோலார் லோக்சபா தொகுதியில், மந்திரி முனி.,மருமகனுக்கு சீட் கேட்டாரு. கிடைக்காம போனதால்,அவரது காலடி சத்தமே கோலார் பக்கமே கேட்காமல் போனது. ஆனால், தேர்தல் முடிவுக்கு அப்புறம் பூவும், புல்லுக்கட்டு பெண்ணும் ஒற்றுமையாக இருந்ததாலே ஜெயிச்சாங்கன்னு பெருமைப்படுறாரு;உபதேசம் செய்றாரு.
மாயமான தலைவர்கள்!
ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்துக்கு கை கட்சியின் ஒரு தலைவரும் வரவே இல்லை. கை வேட்பாளருடன் அவரின் நெருங்கிய கோல்டு சிட்டி நண்பர் மட்டுமே வந்தாரு. ஆனால்,மற்ற தலைவர்களைகாணலயே. அப்படின்னாஎட்டு அசெம்பிளி தொகுதிகளிலும் என்ன வேலை பார்த்தாங்கன்னு அவங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை போலும்.
காத்திருக்கும் சவால்கள்!
செங்கோட்டையில் கால் வைக்கும் கோலாரின் புல்லுக்கட்டு காரருக்குதொகுதி வளர்ச்சிக்கு பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்குதாம். குறிப்பா, கோல்டு சிட்டியில் பின்தங்கி கிடக்கும் ம.அரசின் பல திட்டங்களை நிறைவேற்ற வேணும். ஏற்கனவே ஒதுக்கி இருந்த நிதியை யார், யார் எவ்வளவு தின்னு ஏப்பமிட்டாங்களோ... அதுல கவனம் செலுத்தணும்.