ADDED : ஜூன் 18, 2024 12:41 AM
சமூக ஆர்வலர்களான யோகேந்திர யாதவ், சுஹாஸ் பல்சிகர் ஆகியோர் கூறியதாவது:
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களை தயாரிக்கும் குழுவுக்கு ஆலோசகர்களாக நாங்கள் செயல்பட்டு வந்தோம்.
ஆனால், பாட புத்தகங்களில் உள்ள சில விஷயங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. சில பாடங்களில் உள்ள அம்சங்கள் பாரபட்சமாக இருப்பதாக கூறி, எங்கள் பெயர்களை ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து நீக்கும்படி கடந்தாண்டே தெரிவித்திருந்தோம். ஆனால், எங்கள் பெயர்கள் பாட புத்தகங்களில் நீக்கப்படவில்லை. எனவே, எங்கள் பெயர்களை நீக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.