அரை நிர்வாணமாக 'ரீல்ஸ்' எடுத்த வாலிபர் கைது
அரை நிர்வாணமாக 'ரீல்ஸ்' எடுத்த வாலிபர் கைது
அரை நிர்வாணமாக 'ரீல்ஸ்' எடுத்த வாலிபர் கைது
ADDED : ஜூலை 02, 2024 09:34 PM

பெலகாவி : பஸ் நிலையத்தில் அரை நிர்வாணமாக 'ரீல்ஸ்' வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சமூக வலைதளத்தில் பிரபலம் அடைய வேண்டும் என்ற நோக்கில், சாகசம் செய்து அதை 'ரீல்ஸ்' வீடியோ எடுப்பது அதிகரித்து விட்டது. அந்த வகையில், பெலகாவியின் அதானி சினாலா கிராமத்தைச் சேர்ந்த பாலேஷ், 25, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் எடுத்து, அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
பாலேஷின் ரசிகர் ஒருவர், சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக, பஸ் நிலையத்தில் நடந்து செல்லும் வீடியோவை பதிவேற்றும்படி கேட்டு இருந்தார். இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு, அதானி பஸ் நிலையத்தில் சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக, பாலேஷ் நடந்து சென்றார்.
அதை 'ரீல்ஸ்' வீடியோ எடுத்து, சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ அதானி போலீசார் கவனத்திற்கு சென்றது. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்ததாக கூறி, நேற்று முன்தினம் இரவு பாலேஷ் கைது செய்யப்பட்டார். அவர், போலீஸ் ஸ்டேஷன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு பாலேஷ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 'இனி யாரும் என்னை போன்று வீடியோ எடுக்க வேண்டாம்' என, அதில் அவர் கேட்டுக் கொண்டுஉள்ளார்.