விடுதியில் இளம்பெண் கொலை : கொலையாளி மத்திய பிரதேசத்தில் கைது
விடுதியில் இளம்பெண் கொலை : கொலையாளி மத்திய பிரதேசத்தில் கைது
விடுதியில் இளம்பெண் கொலை : கொலையாளி மத்திய பிரதேசத்தில் கைது
ADDED : ஜூலை 27, 2024 06:43 PM

பெங்களூரு : பெங்களூரு விருந்தினர் விடுதியில், இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருத்தி குமாரி, 22; பெங்களூரு கோரமங்களாவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அப்பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார்.
கடந்த 23ம் தேதி இரவு விடுதிக்கு வந்த வாலிபர் ஒருவர், கிருத்தி குமாரியை கத்தியால் சரமாரியாக குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துவிட்டு தப்பினார்.
இதன் வீடியோ விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி.யில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் அபிஷேக்கின் காதலியும், கிருத்தி குமாரியும் தோழியர். இருவரும் ஒரே அறையில் வசித்தனர். அபிஷேக்கிற்கும், அவரது காதலிக்கும் பிரச்னை ஏற்பட்டது. காதலிக்கு, அபிஷேக் தொல்லை கொடுத்தார்.எனவே, தோழியை வேறு விடுதியில் கிருத்தி குமாரி தங்க வைத்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அபிஷேக், கிருத்தி குமாரியை கொன்றது தெரிய வந்தது.
இந்நிலையில் கிருத்தி குமாரியை கொலை செய்தது, மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த அபிஷேக், 24, என்பதும், அவர் போபாலுக்கு தப்பியதும் போலீசார் அங்கு விரைந்து சென்று கைது செய்தனர்.
நாளை பெங்களூரு கொண்டு வரப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பெங்களூரு போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.