Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கார் மீது டேங்கர் லாரி மோதி இருவர் பலி; ஒருவர் காயம்

கார் மீது டேங்கர் லாரி மோதி இருவர் பலி; ஒருவர் காயம்

கார் மீது டேங்கர் லாரி மோதி இருவர் பலி; ஒருவர் காயம்

கார் மீது டேங்கர் லாரி மோதி இருவர் பலி; ஒருவர் காயம்

ADDED : ஜூன் 20, 2024 09:59 PM


Google News
திலக் நகர்: மேற்கு டில்லியின் திலக் நகர் பகுதியில் தண்ணீர் டேங்கர் லாரி மீது கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

திலக் நகர் மேம்பாலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இந்த விபத்து நேர்ந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பலத்த சேதமடைந்து இருந்த காரில் மூன்று பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே இருவர் உயிரிழந்தனர். அவர்கள் ஜாக்ரித் வைத், வேதாந்த் அரோரா என்பது தெரிய வந்தது. படுகாயமடைந்த அனன்யா சேகல் என்ற பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ரஜவுரி கார்டனில் இருந்து உத்தம் நகர் சவுக், பங்கா சாலை, அவுட்டர் ரிங் ரோடு வரையிலான நஜாப்கர் சாலையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

டேங்கர் லாரி ஓட்டுனர் பாரத் ரே, 34, என்பவரை கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us