Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அமித்ஷா குறித்து பேச்சு: விளக்கம் கேட்டு ஜெய்ராம் ரமேஷூக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

அமித்ஷா குறித்து பேச்சு: விளக்கம் கேட்டு ஜெய்ராம் ரமேஷூக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

அமித்ஷா குறித்து பேச்சு: விளக்கம் கேட்டு ஜெய்ராம் ரமேஷூக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

அமித்ஷா குறித்து பேச்சு: விளக்கம் கேட்டு ஜெய்ராம் ரமேஷூக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

ADDED : ஜூன் 02, 2024 05:23 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

''ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 மாவட்ட கலெக்டர்களிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இந்த மிரட்டல் அப்பட்டமானது. பா.ஜ., எந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது'' என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2004ம் ஆண்டு போலவே நடக்கும்

நிருபர்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டி: அரசியலமைப்பு சட்டத்தின் படி, தேர்தல் கமிஷன் நடுநிலையாக இருக்க வேண்டும். கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மட்டுமின்றி, தேர்தல் கமிஷனையும் மக்கள் கவனித்து வருகின்றனர். ஆனால், இதுவரை தேர்தல் கமிஷன் செயல்பட்ட விதம் மக்களுக்கு தெரியும்.

2004ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் என சொன்னது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது. 2004ம் ஆண்டு போலவே இப்போதும் நடக்கும். அதேபோல் 20 ஆண்டுகள் கழித்து இப்போது வரலாறு திரும்பும். 2004ம் ஆண்டு போலவே இப்போதும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us