குரு பவுர்ணமி
l குருபவுர்ணமியை முன்னிட்டு, சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பவுர்ணமி பூஜை
l பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், அபிேஷகம் நடக்கின்றன. நேரம்: 8:30 மணி: அபிேஷகம்; 11:00 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.
ஆடித்திருவிழா
l 67ம் ஆண்டு ஆடித்திருவிழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நேரம்: காலை 10:30 மணி: பூக்கரகம், பம்பை, உடுக்கை, நாதஸ்வரத்துடன் அம்மன் தேர் ஊர்வலம்; பகல் 12:00 மணி: பக்தி இன்னிசை கச்சேரி; 1:00 மணி: பூ மிதித்தல், கூழ் வார்த்தல், அன்னதானம்; மாலை 4:00 மணி: நாதஸ்வரம் கச்சேரியுடன் ஊஞ்சல் சேவை. இடம்: சக்தீஸ்வரி மாரியம்மன் கோவில், பேண்டு லைன், உரிகம், தங்கவயல்.
ஆண்டு விழா
l ஸ்ரீமகாயாக சேத்திரா ஸ்ரீகாயத்ரி கோயில் அறக்கட்டளை 48 ம் ஆண்டு விழாவை ஒட்டி, உலக நலனுக்காக ஸ்ரீசுப்பிரமண்ய மஹாயாகம், ஸ்ரீகாயத்ரி பிரம்மோற்சவம் நடக்கின்றன. நேரம்: காலை 6:00 மணி: ஸ்ரீவேதமாதா காயத்ரி தேவி அபிேஷகம், கலச அர்ச்சனை, ஜெப பாராயணம், சூரிய நமஸ்காரம், சுப்பிரமணிய ஹோமம், காயத்ரி ஹோமம், மஹா பூர்ணாஹூதி, காயத்ரி தேவிக்கு கும்பாபிேஷகம்; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல்; மாலை 6:00 மணி: ஸ்ரீஸ்ரீ சிதம்பரம் தீக் ஷித் சுவாமிகளுக்கு பக்தர்கள் குரு வந்தனை. மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீமகாயாக சேத்திரா ஸ்ரீகாயத்ரி கோயில் அறக்கட்டளை, யஷ்வந்த்பூர், பெங்களூரு.
காமராஜர் பிறந்த நாள்
l கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சார்பில் காமராஜர் 122வது பிறந்தநாள். நேரம்: காலை 10:30 மணி: இறை வணக்கம்; 10:40 மணி: சங்க நிர்வாகிள், தலைமை விருந்தினர் மேடைக்கு அழைத்தல்; 11:00 மணி: வரவேற்புரை, குத்து விளக்கு ஏற்றுதல், காமராஜர் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்துதல்; 11:15 மணி: விருந்தினர் உரை; 11:45 மணி: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ - மாணவியருக்கு பாராட்டு, ஊக்கத்தொகை வழங்கல்; மதியம் 12:00 மணி: காமராஜர் பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கல்; 12:15 மணி: கஹினா பிசினஸ் நெட்வொர்க் அறிமுகம்; 12;30 மணி: கஹினா இணையவழி தமிழ் கல்வி மாணவர்களின் கலைநிகழ்ச்சி; 12:45 மணி: தேசபக்தி பாடல் குமாரி பூஜாஸ்ரீ; மதியம் 1:00 மணி: குழந்தை அனிஷா நடனம்; 1:15 மணி: நன்றியுரை; 1:30 மணி: மதிய விருந்து. இடம்: சங்க அலுவலக கட்டடம்; கலாசிபாளையம், பெங்களூரு.
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
ஓவிய பயிற்சி
l ஆர்ட் பீட் சார்பில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி. நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ஆர்ட் பீட், ஈஸ்வரி கார்னர், 808, இரண்டாவது தளம், 19வது பிரதான சாலை, இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.
இசை
l பேன்யன் டிரீ வழங்கும் இசை கச்சேரி. நேரம்: மாலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: சவுடய்யா மெம்மோரியல் ஹால், 16வது குறுக்கு, இரண்டாவது பிரதான சாலை, மல்லேஸ்வரம், பெங்களூரு.
காமெடி
l தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப் வழங்கும் லேட் நைட் ஜோக்ஸ். 16 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அனுமதி. நேரம்: இரவு 10:40 மணி முதல் 11:50 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.