தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.3.50 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா
தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.3.50 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா
தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட ரூ.3.50 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா
ADDED : ஜூலை 21, 2024 07:07 AM
பெங்களூரு: தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்பட்ட 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை இண்டிகோ விமானம் வந்தது.
இந்த விமானத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின்படி, விமானத்தில் வந்து இறங்கிய பயணியரை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஒரு பயணியின் லக்கேஜை திறந்து பார்த்தபோது, பிளாஸ்டிக் கவருக்குள், ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை எடை பார்த்தபோது 3.50 கிலோ இருந்தது.
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 3.50 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. கஞ்சா கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த சாகுல் அகமது என்ற பயணி கைது செய்யப்பட்டார்.
ஹைட்ரோபோனிக் கஞ்சா செடி, சூரிய ஒளி இல்லாத குளிர் பிரதேசங்களில் வளர்க்கப்படுவதாகும். இந்த கஞ்சாவுக்கு, சர்வதேச அளவில் கிராக்கி அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தன மரக்கட்டைகள்
பெங்களூரு கே.ஆர்., புரம் அருகே ஐ.டி.ஐ., என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில், சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் படி நேற்று காலை, குடோனில் வனத்துறையினர் சோதனை நடத்தினர். சாக்கு மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான, சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.