Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : ஜூலை 18, 2024 10:43 PM


Google News
ஆன்மிகம்

ஆடி வெள்ளிக்கிழமை


ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

l நேரம்: அதிகாலை 4:00 மணி: மஹா அபிேஷகம்; 8:00 மணி: மஞ்சள் அலங்காரம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி, சிவாஜி நகர்.

l நேரம்: காலை 8:30 மணி: அபிேஷகம், 11:30 மணி: எலுமிச்சை பழம் அலங்காரம்; பகல் 12:00 மணி: மஹா மங்களாரத்தி, 1:00 மணி: அன்னதானம். இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.

l நேரம்: காலை 9:00 மணி: அம்மன் உற்சவ கொடியேற்றுதல்; இரவு 7:00 மணி: கங்கண பூஜையுடன் காப்பு அணிவிப்பு; 8:00 மணி: மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம். இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம், தர்மராஜா கோவில் வீதி, சுபாஷ் சந்திர போஸ் சதுக்கம், சிவாஜி நகர்.

l நேரம்: காலை 6:00 மணி: கணபதி ஹோமம்; 10:00 மணி: பால் குடம் ஊர்வலம்; பகல் 12:00 மணி: பால் அபிேஷகம்; 1:00 மணி: மஹா மங்களாரத்தி; 2:00 மணி: கோலப்போட்டி. இடம்: ஸ்ரீபெரிய பாளையத்து அம்மன் கோவில், முன்ஷிஹள்ளி, சிவன் ெஷட்டி கார்டன், பெங்களூரு.

l நேரம்: பகல் 12:30 மணி: கங்கணம் கட்டுதல், அன்னதானம். இடம்: சுயம்பு காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் வீதி, ஹலசூரு மார்க்கெட், பெங்களூரு.

l நேரம்: காலை 6:00 மணி: அபிேஷகம், அலங்காரம்; 8:00 மணி: மஹா மங்களாரத்தி; மாலை 6:00 மணி: லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம்; இரவு 8:00 மணி: மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம். இடம்: சுந்தர சுவாமி மடாலயம், குங்கும திலக துர்கா தேவி சன்னதி, ஹலசூரு.

l நேரம்: காலை 9:30 மணி: பூச்சொறிதல். இடம்: ஸ்ரீ கங்கம்மா தேவி கோவில், 2வது கோவில் தெரு, மல்லேஸ்வரம்.

l நேரம்: காலை 8:30 மணி: சங்கல்பம்; 9:00 மணி: கலச பூஜை; 9:30 மணி: ஹோமம்; 11:30 மணி: பூர்ணாஹூதி; 11:40 மணி: கலச அபிேஷகம்; பகல் 12:00 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: கதம்பாரண்ய ஆசிரமம், சர்வ சக்தி பீடம், ஆசிர்கானா தெரு, சிவன் ெஷட்டி கார்டன்.

l நேரம்: காலை 9:00 மணி முதல்: அபிஷேகம், புஷ்ப அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை. இடம்: ஸ்ரீ கெங்கை அம்மன் கோவில், கணேஷ்புரம், ராபர்ட்சன் பேட்டை.

l நேரம்: மாலை 6:00 மணி: சிறப்பு பூஜைகள். தீப அலங்காரம், சுவாமிக்கு மலர் அர்ச்சனைகள், பக்தர்களுக்கு பிரசாதம். இடம்: ஸ்ரீ மாரியம்மன் கோவில், பவரிலால்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை.

l நேரம்: காலை 9:30 மணி: அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம். மாலை: மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், 4வது வட்டம், கென்னடீஸ்.

l நேரம்: காலை 10:00 மணி: சந்தன அபிஷேகம், மஞ்சள் அலங்காரம். இடம்: ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் கோவில், 4 வது பிளாக், ராபர்ட்சன்பேட்டை.

lநேரம்: காலை 6:00 மணி: அம்மனுக்கு மலர் அலங்காரம், தீபாராதனை; இரவு 7:00 மணி: விசேஷ பூஜைகள், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், எம்.ஜி., மார்க்கெட், ராபர்ட்சன்பேட்டை.

l நேரம்: காலை 9:00 மணி முதல்: அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை. இடம்: ஸ்ரீ அம்பிகையம்மன்கோவில், ஈ.டி., பிளாக், உரிகம்.

l நேரம்: காலை 10:00 மணி: அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, குங்கும பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில், விவேக்நகர், ராபர்ட்சன்பேட்டை.

lநேரம்: காலை 10:00 மணி: சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள், மஹா மங்களாரத்தி. இடம்: ஸ்ரீ பாட்டை கெங்கையம்மன், ஹென்றீஸ், கோரமண்டல், தங்கவயல்.

l நேரம்: காலை 6:00 மணி முதல்: பாலாபிஷேகம், மலர் அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம். இடம்: ஸ்ரீ உத்தண்டி அம்மன் கோவில், சாம்பியன், தங்கவயல்.

l நேரம்: இரவு 7:00 மணி: ஸ்ரீ முனீஸ்வர சுவாமி பூஜை. இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில், 7 வது மெயின், எம்.வி.கார்டன், ஹலசூரு, பெங்களூரு.

l நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை: சண்டி ஹோமம், பூர்ணாஹூதி, அபிேஷகம், அன்னதானம் வழங்கல்; இரவு 7:00 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: அங்காள பரமேஸ்வரி கோவில், மாகடி ரோடு, பெங்களூரு.

l நேரம்: காலை 7:00 மணி: அபிேஷகம்; 9:30 மணி: மஹா மங்களாரத்தி; இரவு 8:00 மணி: மஹா மங்களாரத்தி. இடம்: ஸ்ரீமாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர், பெங்களூரு.

வளர்பிறை பிரதோஷம்


l வளர்பிறை பிரதோஷத்தை ஒட்டி, சிவன் கோவில்கள், சன்னிதிகளில் நந்தி, சிவன், பார்வதிக்கு சிறப்பு அபிேஷகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன. நேரம்: மாலை 4:15 மணி முதல் 6:00 மணி வரை: நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதேஸ்வரர், காசி விசாலாட்சிக்கு அபிேஷகம், அலங்காரம்; 6:15 மணி: இறைவன் - இறைவி உட்பிரகார வலம். இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, பெங்களூரு.

lநேரம்: மாலை 4:15 மணி முதல் 6:00 மணி வரை: நந்தீஸ்வரர், ஏகாம்பரீஸ்வரருக்கு அபிேஷகம், அலங்காரம்; 6:15 மணி: இறைவன் - இறைவி உட்பிரகார வலம். இடம்: தருமராஜா ஏகாம்பரீஸ்வரர் கோவில், தருமராஜா கோவில் தெரு, சிவாஜி நகர்.

l நேரம்: மாலை 4:30 மணி: கொடி கம்பம் நந்தி, சோமேஸ்வருடன் பஞ்ச லிங்கங்களுக்கு அபிேஷகம். இடம்: சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.

l நேரம்: மாலை 4:30 மணி: நந்தி, சுந்தரேஸ்வருக்கு அபிேஷகம். இடம்: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சிவாஜி நகர்.

l நேரம்: மாலை 5:00 மணி: அபிஷேகம்; 6:00 மணி: தீபாராதனை. இடம்: பஞ்சலிங்கேஸ்வரா கோவில், இரண்டாவது பிரதான சாலை, பேலஸ் குட்டஹள்ளி, பெங்களூரு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us