ADDED : ஜூலை 18, 2024 10:43 PM
ராம்நகர் : ராம்நகர் பிடதியை சேர்ந்தவர் சந்துரு, 25. இவரது பக்கத்து வீட்டில், 19 வயது இளம்பெண் வசிக்கிறார். கல்லுாரி ஒன்றில் படிக்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் சந்துருவுடன், கல்லுாரி மாணவி பழகினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்துருவிடம், மாணவி மொபைல் போனில் பேசினார்.
'என் வீட்டில் பெற்றோர் இல்லை. உணவு சாப்பிட கேழ்வரகு களி தயாரிக்க வேண்டும். நீங்கள் உதவி செய்கிறீர்களா' என்று கேட்டுள்ளார்.
மாணவியை தனது வீட்டிற்கு வரும்படி சந்துரு அழைத்தார். மாணவியும், சந்துரு வீட்டிற்கு சென்றார். அப்போது சந்துரு, திடீரென மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தார். அதை மொபைல் போனில் வீடியோவும் எடுத்துக் கொண்டார்.
அந்த வீடியோவை காண்பித்து அடிக்கடி உல்லாசமாக இருக்க வரும்படி அழைத்து உள்ளார். மனம் உடைந்த மாணவி, சந்துரு மீது பிடதி போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் சந்துரு கைது செய்யப்பட்டார்.