சுவாமி படங்கள் ஜூலை 7ல் சேகரிப்பு
சுவாமி படங்கள் ஜூலை 7ல் சேகரிப்பு
சுவாமி படங்கள் ஜூலை 7ல் சேகரிப்பு
ADDED : ஜூலை 05, 2024 06:19 AM
துாரவாணி நகர்: ஸ்ரீகாமாட்சி ஆர்ஷா சமஸ்கிருதி அறக்கட்டளை, ஆர்.டி., நகர் பெங்களூரு ரோட்டரி, ஹசிரு தலா ஆகியவை இணைந்து வரும் 7 ம் தேதி, ஐந்து சிறப்பு பொருட்கள் சேகரிப்பு நிகழ்ச்சி நடத்துகிறது.
பெங்களூரு கே.ஆர்.,புரம், துாரவாணி நகர் ஐ.டி.ஐ., காலனியில் உள்ள ராகவேந்திரா சுவாமி மடத்தில், காலை 9:30 மணி முதல் பகல் 12:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது.
வீட்டில் பயன்படுத்தாமல் உள்ள சுவாமி படங்கள், சிலை, பூஜை பொருட்கள் கொண்டு வரலாம். குறிப்பாக மெட்டாலிக், பிரேம் மற்றும் லேமினேஷன் செய்யப்பட்ட சுவாமி படங்கள், சிலைகள், ஸ்லோகம் புத்தகம், காலண்டர், பஞ்சாங்கம் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்த பொருட்களை, உறுதியான துணி அல்லது சணல் பைகளில் மட்டுமே கொண்டு வர வேண்டும். இதில் பங்கேற்போர், 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
சேகரிக்கப்படும் பொருட்களுக்கு விசர்ஜன ஆரத்தி காண்பிக்கப்படும். நல்ல நிலையில் உள்ள பொருட்கள் மறு விற்பனை செய்யப்படும். மற்றவை மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும்.